ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு
x

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானை யூனியன் அரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள பள்ளி கட்டிடங்கள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள சத்துணவு மையத்தையும், சமையலறை போன்றவற்றை நேரில் பார்வையிட்டார். அப்போது பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்க விடாமல் உடனுக்குடன் அதனை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க ஊராட்சி செயலாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்த அவர் அங்குள்ள பள்ளிக்கட்டிடங்கள் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் இடிந்து இருப்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Related Tags :
Next Story