மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரைமஸ்தான், அமுதா, மாவட்ட பொருளாளர் சாரதி, ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயயலாளருமான ஆர்.காந்தி கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டுவது குறித்தும், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கட்சிப்பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி அவரது உருவச்சிலை வருகிற 19-ந் தேதி திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் அவரது உருவப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தி விழா கொண்டாடிடவும், தலைமைக் கழகம் அறிவித்தபடி நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடத்திடவும் முடிவு செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.