4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் தேர்வு


4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் தேர்வு
x

விருதுநகர் மாவட்டத்தில் 4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் ேதர்வு நடக்கிறது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் 4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் ேதர்வு நடக்கிறது.

கல்வி அலுவலர் தேர்வு

இதுகுறித்து கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள வட்டார கல்வி அலுவலர் தேர்வு வருகிற 10-ந் தேதியன்று நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்டவாறு 4 தேர்வு மையங்களில் மொத்தம் 1,235 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மைய அனுமதிக்கு தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வருகை புரிதல் வேண்டும். தேர்வுக்கு கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா பயன்படுத்துதல் வேண்டும். தேர்வர்கள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வர அனுமதி இல்லை.

1,235 தேர்வர்கள்

விரிவான கூடுதல் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தேர்வு மையத்தின் விவரம் வருமாறு:-

விருதுநகரில் 4 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 340 தேர்வர்களும், சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 340 தேர்வர்களும், கே.வி.எஸ். ஆங்கில வழி பள்ளியில் 280 தேர்வர்களும், பி.எஸ். சிதம்பர நாடார் ஆங்கில வழி பள்ளியில் 275 தேர்வர்களும் ஆக மொத்தம் 1,235 தேர்வர்கள் தேர்வேழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story