பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
அரக்கோணத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
பாட்டாளி மக்கள் கட்சியின், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் அரக்கோணம் கும்பினி பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சாரதி வரவேற்றார். தனசேகர், ஜெகன், அன்பு மற்றும் சோபன் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் க.சரவணன், மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க செயலாளர் தீனதயாளன், மாநில செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் டாக்டர். அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள வன்னியர் சங்க மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து அதிகமானோர் கலந்து கொள்வது, சித்தேரியில் உள்ள தனியார் சிமெண்டு தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜி நன்றி கூறினார்.