எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயற்குழு கூட்டம்
எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது
திருநெல்வேலி
களக்காடு:
களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்றார். அம்பை சட்டமன்ற தொகுதி தலைவர் செய்யது, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் தவுபிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நெல்லை புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடத்த வேண்டும், புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு அளிக்க வேண்டும், பருவமழை தொடங்குவதால் கட்சியின் தன்னார்வலர்கள் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.சிராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story