சாலை அமைக்க மாவட்ட வன அலுவலர் ஆய்வு


சாலை அமைக்க மாவட்ட வன அலுவலர் ஆய்வு
x

வெள்ளைக்கல் மலைக்கு சாலை அமைக்க மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட குருமலை மலை கிராமத்தை ஒட்டி வெள்ளைக்கல் மலை, நச்சிமேடு, பள்ளக்கொல்லை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. தற்போது மலை அடிவாரத்தில் இருந்து குருமலை கிராமம் வரை தார்சாலை வசதிசெய்யபட்டுள்ளது. இந்த நிலையில் குருமலையில் இருந்து வெள்ைளக்கல் மலை வரை சாலை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் குமாரவேல்பாண்டின் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து தற்போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மண் சாலை அமைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மற்றும் நடைபெற்று வரும் திட்ட பணிகளையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது வனச்சரக அலுவலர் ரவிக்குமார், வனவர் காத்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story