மாவட்ட பொதுக்குழு கூட்டம்


மாவட்ட பொதுக்குழு கூட்டம்
x

மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சம்மந்தபுரம் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் லீவா உதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர், மாவட்ட மற்றும் நகர பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். மாவட்ட பிரதிநிதி காதர் முகமது ஹுசைன் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம் பைஜி, மாவட்ட பொருளாளர் முகமது பிலால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காதர் மைதீன் முகமது, அபூபக்கர் பார்கவி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவர உள்ள பொது சிவில் சட்டத்தை முழுமையாக எதிர்க்க வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் தாக்குதலையும் கண்டிப்பது, பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து சொக்கர் கோவில் வரை உள்ள சாலைகளையும், சம்மந்தபுரம் தெருக்களில் உள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும். கீழ பள்ளி வாசல் மயான பகுதியில் மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பிரதிநிதி காதர் மைதீன் நன்றி கூறினார்.


Next Story