வாணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை


வாணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை
x

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் வாணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.

திருப்பத்தூர்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளில் வாணியம்பாடி வாணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். பிளஸ்- 2 தேர்வில் வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி திவ்யா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவன் மேகேஷ்குமார் 574 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி மித்ராஸ்ரீ 570 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம், கணினி அறிவியல் ஆகியபாடங்களில் 5 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவில் மாணவி சஞ்சனா 481 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மதுநிஷா 475 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத் தையும், மெல்லினா 468 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 3 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றவர்களையும், தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி தலைவர் எம்.கோபால், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் செல்வராஜ் மற்றும் வாணி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story