மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி


மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி
x

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடத்தப்பட உள்ளது.

வட்டார அளவில் வருகிற 5-ந் தேதிக்குள், மாவட்ட அளவில் 6-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள், மாநில அளவில் ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதிக்குள் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாநில அளவிலும், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story