மாவட்ட அளவிலான கலை, பண்பாட்டு திருவிழா
காட்பாடியில் மாவட்ட அளவிலான கலை, பண்பாட்டு திருவிழா நடந்தது.
வேலூர்
காட்பாடி
வேலூர் மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டு திருவிழா காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று நடந்தது.
இதில் ஒன்றிய அளவில் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வு போட்டி நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் சண்முகம், கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வரபிள்ளை வரவேற்றார்.
இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர்.
முடிவில் உதவி தலைமை ஆசிரியர் குமரன் நன்றி கூறினார். என்.சி.சி. அலுவலர் க.ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Related Tags :
Next Story