மாவட்ட அளவிலான செஸ் போட்டி


மாவட்ட அளவிலான செஸ் போட்டி
x

தியாகதுருகம் அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

மாமல்லபுரத்தில் நாளை தொடங்க உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதற்கு முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி வரவேற்றார். இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு ஆகிய 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 144 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. இதில் உடற் கல்வி ஆசிரியர்கள் தனச்செல்வம், கதிரவன், புவனசுந்தர சரவணன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் நெப்போலியன் நன்றி கூறினார். போட்டியில் முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகள் சென்னையில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றனர்.


Next Story