மாவட்ட அளவிலான செஸ் போட்டி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
உறையூர்:
மாவட்ட அளவிலான செஸ் போட்டி திருச்சி உறையூரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. 7, 9, 11, 13, 18 ஆகிய வயது பிரிவினருக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துறையூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் 250 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட சதுரங்க கழக துணை தலைவர் வெங்கட்ராமன், இணை செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருங்காலத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.