மாவட்ட அளவிலான சதுரங்கபோட்டி- நாளை தொடங்குகிறது


மாவட்ட அளவிலான சதுரங்கபோட்டி- நாளை தொடங்குகிறது
x

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டிகளை காண பெரம்பலூர் மாவட்ட அளவிலான தேர்வு சதுரங்கபோட்டி நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவர் சரவணன், செயலாளர் அலெக்சாண்டர், பொருளாளர் அழகுதுரை ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டிகள் ஜூலை மாதம் 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகளிடையே 3 நாட்கள் நடைபெறும் போட்டிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் முதலிடம் பிடிக்கும் ஆண், பெண் இருவர் தேர்வு செய்யப்பட்டு மாமல்லபுரத்திற்கு ஒலிம்பியாட் சதுரங்க போட்டிகளை நேரடியாக காண்பதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதனால் தமிழக சதுரங்க வீரர்-வீராங்கனைகளுக்கு புதுவித அனுபவமும், உத்வேகமும் கிடைக்கும். அதன்படி பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகத்தால், தேர்வு போட்டிகள், பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏ.ஐ.சி.எப். நுழைவு கட்டணம் ரூ.250-ஐ http://prsaicf.in/player என்ற இணையதளத்தில் செலுத்தி, தங்களது போட்டோ, பிறப்பு சான்றிதழ் நகலை பதிவேற்றம் செய்து, மாவட்ட அளவிலான சதுரங்க வீரர்கள் தேர்வு போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் 9952794719 மற்றும் 99947 46447 ஆகிய எண்களை தொடர்புகொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story