மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்


மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்
x

சிவகங்கை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் காரைக்குடியில் நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் 44-வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டியினை முன்னிட்டு காரைக்குடி கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டி ெதாடக்க விழா நடைபெற்றது. 15 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான இப்போட்டிகள் மாணவர்கள்-மாணவிகள் என இரு பிரிவாக நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 170 மாணவர்களும் 47 மாணவிகளும் என மொத்தம் 217 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் 9 சுற்றுகளாக நடைபெற்றன.

தொடக்க விழாவிற்கு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர்கள் எட்வின் சார்லஸ், ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கண்ணன் வரவேற்றார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.பொருளாளர் பிரகாஷ், துணை செயலாளர் ராமு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூடுதல் செயலாளர் பிரகாஷ்மணிமாறன் நன்றி கூறினார். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவருக்கு சென்னையில் நடைபெறும் 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிட இலவச சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.


Related Tags :
Next Story