மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி


மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
x

அண்ணா பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வருகிற 15-ந்தேதி நடக்கிறது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

அண்ணா பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வருகிற 15-ந்தேதி நடக்கிறது.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சைக்கிள் போட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நாகை மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வருகிற 15-ந் தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை நாகை மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பில் நடப்பு இந்த போட்டி நடைபெறுகிறது.

2 பிரிவுகள்

காலை 8 மணிக்கு நாகூர் அருகே உள்ள மீன்வள பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி கங்களாஞ்சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி வரை போட்டி நடை பெறுகிறது. இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவில் தயாரான சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் விவரங்கள் அடங்கிய நுழைவு படிவத்தினை வருகிற 12-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் dsonagai@gmail.com எனும் இணைய தள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சான்றிதழ் வழங்கப்படும்

நாகை மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்கள் பெறுபவர்களுக்கு தலா ரூ.250-க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story