மாவட்ட அளவிலான திரைப்பட திறன் போட்டி


மாவட்ட அளவிலான திரைப்பட திறன் போட்டி
x

வேலூரில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான திரைப்பட திறன் போட்டியில் மாணவர்கள் நடித்து காண்பித்து திறமைகளை வெளிக்காட்டினர்.

வேலூர்

வேலூரில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான திரைப்பட திறன் போட்டியில் மாணவர்கள் நடித்து காண்பித்து திறமைகளை வெளிக்காட்டினர்.

திரைப்பட திறன் போட்டி

வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் திரைப்பட திறன் போட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்கள் வட்டார அளவிலான போட்டியில் பங்குபெறுவார்கள். அவ்வாறு வட்டாரத்துக்கு 8 மாணவர்கள் என மாவட்டத்தில் 64 பேர் மாவட்ட அளவிலான திரைப்பட திறன் போட்டிக்கு 64 பேர் தகுதி பெற்றனர்.

அவர்களுக்கான போட்டி வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளியில் மைய பொறுப்பாளர் ஜே.எபினேசர் தலைமையில் நடந்தது.

இந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்கள் சிறப்பாக திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். வட்டார கல்வி அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை துணை ஆய்வாளர்கள் மணிவாசகன், சைன்மோல், ஒருங்கிணைப்பாளர் அதிசயநாதன் உள்பட பலர் செய்திருந்தனர்.

மாணவர்கள் அந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் போன்று உடை அணிந்து நடித்து திறமைகளை வெளிக்காட்டினர்.

மாவட்ட அளவில்...

இந்தப்போட்டி குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மல்லி என்ற குறும்படம் அனைத்து மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அந்த திரைப்படைத்தை மையமாக கொண்டு மாணவர்களின் திறமைகளை அறியும் வகையில் திரைப்பட திறன் போட்டி நடத்தப்படுகிறது.

அந்த திரைப்படம் குறித்து மாணவர்கள் விமர்சித்தல், கதாபாத்திரம் குறித்து நடித்து காண்பித்தல், கதையை சுருக்கமாக கூறுதல் என 7 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் 4 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். அதில் தேர்வாகும் 20 பேர் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்றனர்.


Next Story