மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள்


மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒலிம்பிக், சங்க கொடி ஏற்றப்பட்டது.மாவட்ட தடகள கழக தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் அசோகன், நெய்வேலி பயிற்சியாளர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து இந்த தடகள விளையாட்டு போட்டியில் கடலூர் மாவட்டம் முழுவதில் இருந்தும் 850-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வயதை அடிப்படையாக கொண்டு, அதாவது 14, 16, 18, 20 வயதுக்குட்பட்டோர்களை பிரிவாக பிரித்து அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

50 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதல் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் வரையிலும், தடை தாண்டி ஓடுதல், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலையில் பரிசு வழங்கப்பட்டது.இந்த போட்டிகளில் முதல், 2-ம் இடம் பிடித்த மாணவ-மாணவிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்க இருக்கும் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றதாக தடகள கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதான தடகள பயிற்சியாளர் மாயகிருஷ்ணன், தடகள கழக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.


Next Story