மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி
தொண்டியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது.
தொண்டி,
தொண்டியில் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம், பாரத் பிட்னஸ் ஜிம் ஆகியவை இணைந்து 19-வது மிஸ்டர் ராம் நாடு மாவட்ட ஆணழகன் போட்டியை நடத்தியது. இதற்கு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாநிலச்செயலாளர் சாதிக் பாட்சா, இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜசேகர், தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க பொதுச் செயலாளர் ஆனந்தன் வரவேற்றார்.
போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு ஜவஹர் அலிகான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 55 கிலோ முதல் 75 கிலோ உடையவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு ஒன்று முதல் ஐந்து வரையிலான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் 19-வது மிஸ்டர் ராம்நாடு மாவட்ட ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
போட்டிகளின் நடுவர்களாக மதுரை அயன் போஸ், தேசிய நடுவர் சேலம் மயில்சாமி, மாநில நடுவர் முத்துக்குமார் ஆகியோர் செயல்பட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் போரிஸ்டன்நன்றி கூறினார்.