மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்


மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
x

பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்ட சுகாதார பணிகள் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆர்.செல்வகுமார் தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

காலை 9 மணிக்கு தொடங்கிய விளையாட்டு போட்டிகள் மாலை 5 மணி வரை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள், தற்காலிக டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்பட 800-க்கும் மேற்பட்ட இருபாலர்களும் கலந்து கொண்டனர்.

இதில் கிரிக்கெட், கைப்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம், செஸ், 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், ஈட்டி எறிதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுரேஷ் மற்றும் அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story