பேரிடர் கால மீட்பு பொருட்களை மாவட்ட அலுவலர் ஆய்வு


பேரிடர் கால மீட்பு பொருட்களை மாவட்ட அலுவலர் ஆய்வு
x

வேலூர் தீயணைப்பு அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பொருட்களை மாவட்ட அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

வேலூர் தீயணைப்பு அலுவலகத்தில் பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்காகவும், மீட்பு பணிகளுக்காகவும் ரப்பர் படகு, மரம் அறுக்கும் கருவி, கயிறுகள், மிதவைகள், தீயணைக்கும் கருவிகள், வாகனங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஆய்வு செய்யும் பணி வேலூர் தீயணைப்பு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அனைத்து பொருட்களையும் மாவட்ட அலுவலர் அப்துல் பாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அனைத்து பொருட்களையும் முறையாக பராமரிக்க தீயணைப்பு வீரர்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் பழனி, தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story