சிமெண்டு சாலை பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆய்வு
திருச்செந்தூர் அருகே சிமெண்டு சாலை பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் யூனியன் வீரபாண்டியன்பட்டினம் (ரூரல்) பஞ்சாயத்து 1-வது வார்டு அடைக்கலாபுரம் தோமையார் தெருவில் மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சாலையை தரமாக அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, 1-வது வார்டு உறுப்பினர் பிரவீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story