மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்


மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
x
சேலம்

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று அதன் கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரூ.3 கோடியில் மாவட்டத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல். அதே போன்று சாக்கடை கால்வாய் கட்டுதல், சாலை அமைத்தல் ஆகிய பணிகள் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story