மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்


மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்
x

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது.

தென்காசி

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், செயலாளர் (பொறுப்பு) ருக்மணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் கனிமொழி, "தலைவர் வார்டுக்கு ரூ.1 கோடி மற்றும் துணைத் தலைவர் வார்டுக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் சரி சமமாக பங்கிட்டு கொடுக்க வேண்டும்" என்றார். இதே கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர் மாரிமுத்துவும் பேசினார். இதுதொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கூட்டம் முடிவடைந்ததாக எழுந்து சென்றனர். அத்துடன் கூட்டம் முடிவடைந்தது. கூட்டத்தில் வைக்கப்பட்ட 2 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


Next Story