மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கானவரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு:கலெக்டர் தகவல்


மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கானவரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு:கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:45 PM GMT)

தேனி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இந்த திட்டக்குழுவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 5 பேர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் இருந்தும், 7 பேர் நகராட்சி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களில் இருந்தும் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் மாவட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் வாக்காளர்களாக இருப்பார்கள். இந்த தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுமாறு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுற்றறிக்கை அனுப்பினார்.

அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. தேனி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகம் ஆகிய இடங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. அதில், ஊரக பகுதியில் 10 பேரும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 511 பேரும் இடம் பெறுவார்கள். இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.


Next Story