ஆட்டோ டிரைவர், பூண்டு வியாபாரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு


ஆட்டோ டிரைவர், பூண்டு வியாபாரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
x

ஆட்டோ டிரைவர், பூண்டு வியாபாரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்

திருச்சி

துறையூர் டவுன் பெரியார் நகரில் வசிக்கும் சின்னையா மனைவி கிருஷ்ணம்மாள். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு துறையூர் பஸ்நிலையம் அருகே 3½ பவுன் தங்க சங்கிலி, ஏ.டி.எம்.கார்டு இருந்த கைப்பையை தவறவிட்டார். அதை, துறையூர் போலீஸ் நிலையம் அருகில் பூண்டு வியாபாரம் செய்யும் துறையூர் மாருதி நகரை சேர்ந்த சுதாகர் கண்டெடுத்து துறையூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்து, கிருஷ்ணம்மாளிடம் ஒப்படைத்தார்.

இதுபோல், கடந்த வாரம் விராலிமலை சாலையில் தனது மகனுடன் நடந்து சென்ற மணப்பாறை தெற்கு லட்சுமிபுரத்தை சேர்ந்த கோமளாதேவியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றனர். இதை அந்த வழியாக ஆட்டோ ஓட்டிவந்த செல்லையா என்பவர் பார்த்து, உடனே ஆட்டோவை குறுக்கே நிறுத்தினார். இதில் ஆட்டோவில் மோதி இருசக்கர வாகனத்துடன் 2 பேரும் கீழே விழுந்தனர். அதில், ஒருவரை பிடித்து மணப்பாறை போலீசில் ஒப்படைத்தார்.

இந்தநிலையில் பூண்டு வியாபாரி சுதாகர், ஆட்டோ டிரைவர் செல்லையா ஆகியோரின் செயல்களை பாராட்டி, நேற்று இருவரையும் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.


Next Story