வாஞ்சிநாதன் சிலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் மரியாதை
செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாபுதீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தென்காசி
செங்கோட்டை:
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை முத்துசாமி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது மார்பளவு சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயினுலாபுதீன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராமசுப்பிரமணியன், செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் பார்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் மற்றும் நகராட்சி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். அதனை தொடா்ந்து வாஞ்சிநாதன் தம்பி மகன் பேரன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், வாஞ்சி இயக்க நிறுவன தலைவா் ராமநாதன், தியாகி சாவடி அருணாசலம்பிள்ளை பேரன் ராமலிங்கம், தியாகி கோதையம்மாள் மகன் கைலாசநாதன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
Related Tags :
Next Story