மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
காட்பாடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர்
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக மாலதி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் நேற்று காட்பாடி தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார். தாலுகா அலுவலகத்தில் ஊழியர்களின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்தும், அவற்றில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். விண்ணப்பிப்பவர்களுக்கு சான்றிதழ்கள் தாமதம் இல்லாமல் வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின் போது காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story