மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
கே.வி.குப்பம் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் தாலுகாவில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கே.வி.குப்பம் தாலுகா, லத்தேரி, திருமணி ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பது, ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பது, லத்தேரி கிராமத்தில் உள்ள ெரயில் நிலையத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ெரயில்வே இடத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் திருமணி கிராமத்தில் உள்ள அரசு தோப்பு புறம்போக்கு இடத்தில் 47 நபர்களுக்கு பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பட்டா வழங்குவது, கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் பொதுப் பிரிவு, வட்ட வழங்கல் அலுவலகப் பிரிவு, சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்களிடமும், பயனாளிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார்.
ஆய்வின்போது தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்வாணன் உள்பட அதிகாரிகள் இருந்தனர்.