தடுப்பணை கட்டுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
தடுப்பணை கட்டுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒடுகத்தூரை அடுத்து மேல் அரசம்பட்டு பகுதியில் மடிக்கம் என்ற கிராமத்தில் கோயில் மலையாறு உள்ளது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாகப் போகிறது. எனவே இந்தப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில் தடுப்பணை கட்டுவதற்கு பலமுறை ஆய்வு நடந்துள்ளது.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மண்டல துணை தாசில்தார், மற்றும் குறுவட்ட நில அளவர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story