மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
விழுப்புரம்
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாட்சி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகுமார், பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பா.ம.க. வளர்ச்சி குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story