விழுப்புரத்தில் 40 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் அகற்றம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை


விழுப்புரத்தில் 40 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் அகற்றம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 40 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அகற்றினா்.

விழுப்புரம்

விழுப்புரம் மாதா கோவில் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளி மாணவ- மாணவிகளை அதிகமாக ஏற்றிச்செல்லும் வாகனங்களை திடீரென ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி மாணவ- மாணவிகளை ஏற்றிச்சென்ற 5 ஷேர் ஆட்டோக்களை சோதனை செய்ததில் தகுதிச்சான்று மற்றும் காப்புச்சான்று நடப்பில் இல்லாதது கண்டறியப்பட்டது. உடனே அந்த 5 ஷேர் ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களை சோதனை செய்ததில் அதிக ஒலி எழுப்பக்கூடிய 40-க்கும் மேற்பட்ட பஸ்களில் இருந்து காற்று ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்கள்) அகற்றினர். மேலும் 3 தனியார் பஸ்கள், 3 அரசு பஸ்களுக்கு காற்று ஒலிப்பான் பொருத்தி பயன்படுத்தியதற்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதன் மூலமாக அபராதமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


Next Story