ரெயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு
நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே மேலாளர் எஸ்.எம்.சர்மா ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே மேலாளர் எஸ்.எம்.சர்மா ஆய்வு செய்தார்.
அதிகாரி ஆய்வு
திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் எஸ்.எம்.சர்மா நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரம், பராமரிப்பு கூடம், ரெயில்வே ஊழியர்கள் ஓய்வறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, நாகர்கோவிலில் தினமும் எத்தனை ரெயில்கள் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது, கோட்டார் ரெயில் நிலையத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள், ரெயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை எஸ்.எம்.சர்மா கேட்டறிந்தார்.
இரட்டை ரெயில் பாதை
மேலும் பிளாட்பாரங்களில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், பயணிகள் தங்கும் கட்டிடம், கழிவறை, துணிகள் சலவை செய்யும் இடம், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட், இரட்டை ரெயில் பாதை பணி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கோட்டார் ரெயில் நிலைய மேலாளர் முத்து மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள், ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் பலரும் உடன் இருந்தனர். பின்னர் எஸ்.எம்.சர்மா ரெயிலில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.