தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம்- மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்


தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம்- மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்
x

சுமை பணி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம்-மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

சுமை பணி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம்-மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமைப்பணி தொழிலாளர்

திருவாரூரில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் மண்டல கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில சம்மேளன உதவி செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் தஞ்சை முருகேசன், நாகை ஜெயராமன், மயிலாடுதுறை சங்கரய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கீவளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சி.ஐ.டி.யூ. மாநிலச்செயலாளர் திருவேட்டை ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் வெங்கடபதி, மாநில சிறப்பு தலைவர் குணசேகரன், மாநில பொதுச்செயலாளர் அருள்குமார், மாவட்ட நிர்வாகிகள் திருவாரூர் முருகையன், தஞ்சாவூர் ஜெயபால், நாகை தங்கமணி, மயிலாடுதுறை மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரூ.5ஆயிரம் தீபாவளி போனஸ்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சேமிப்பு கிடங்குகளில் பணி செய்யும் சுமை பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சுமை பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் சேம நலநிதி மற்றும் மருத்துவ காப்பீட்டு வசதி ஏற்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு ஏற்படுத்தும் வரை தொழிலாளர்கள் பணி செய்யும் போது விபத்து ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைக்கான பொறுப்பை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நெல் மூட்டைகளை எடை பார்த்து சரி செய்து மூட்டை தைக்க சிற்பம் ஒன்றுக்கு ரூ.30 வழங்க வேண்டும். நிரந்தர கட்டிடம் இல்லாத நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உடனடியாக கட்டிடம் கட்டித்தர வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5ஆயிரம், பொங்கல் கருணைத்தொகையாக ரூ.3ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story