தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

ஜெயங்கொண்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தே.மு.தி.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வருகிற 25-ந் தேதி அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்குவது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, பேனா, புத்தகம் வழங்குவது, ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி-சேலை வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கட்சிப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேக்கப், நிர்வாகிகள் ராஜா, குருநாதன், விஜயகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் சின்னபாண்டு என்கிற குமார் வரவேற்றார். முடிவில் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Next Story