தே.மு.தி.க. பிரமுகர் திடீர் தர்ணா
கலெக்டர் அலுவலகத்தில் தே.மு.தி.க. பிரமுகர் திடீர் தர்ணா
விழுப்புரம்
தே.மு.தி.க. செஞ்சி ஒன்றிய செயலாளர் பிரபு நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள நுழைவுவாயில் முன்பு வந்த அவர் திடீரென அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், தாண்டவசமுத்திரம் மலை ஓடையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் முறையாக அகற்றவில்லை. அங்குள்ள 2 பேருக்கு புளியமரம், 2 வீட்டை ஒதுக்கியுள்ளனர். இந்த புளிய மரம் கடந்த ஆண்டு ரூ.8,050-க்கு ஏலம் போனது. ஆனால் இந்த ஆண்டு ஏலம் விடவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். அதன் பிறகு அவர், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.