தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

அரியலூர்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகு திட்டங்களையும், அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 72 கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் வருகிற 7-ந்தேதி 'திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்' நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் அதில் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் பின்வருமாறு:-

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வடக்கு ஒன்றியம்- கந்திலி கரிகாலன், திருமானூர் மேற்கு ஒன்றியம்- ஆம்பூர் தருமன், அரியலூர் நகரம்- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆண்டிமடம் வடக்கு ஒன்றியம்- குடியாத்தம் பாரி.

இந்த தகவலை தி.மு.க. கொள்கை பரப்புச்செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., திண்டுக்கல் ஐ.லியோனி, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., சபாபதி மோகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Next Story