தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணற்றில் நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணற்றில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மல்லாங்கிணறு நகர செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் 31-ந் தேதி முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவு நாளன்று மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வையம்பட்டி வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மல்லாங்கிணறு பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ், காரியாபட்டி யூனியன் துணைத்தலைவர் கல்குறிச்சி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேகர், சிதம்பர பாரதி, மேற்கு ஒன்றிய துணை செயலாளர் குருசாமி, ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.