தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்


தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
x

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணற்றில் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணற்றில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் கடமங்குளம் ரமேஷ் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் உப்பிலிக்குண்டு குருசாமி வரவேற்றார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கட்சி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பரபாரதி, சேகர், முத்துகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story