தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருச்சுழி,
திருச்சுழி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் புல்லாநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுத்தம்பி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிதாசன், ஒன்றிய அவைத்தலைவர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் தொல்காப்பியன் வரவேற்றார். மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ராஜா சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வது, தி.மு.க.விற்கு புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர் பூலாங்கால்ஜான், திருச்சுழி ஒன்றிய குழு துணைத்தலைவர் மூக்கையா, ஒன்றியசிறுபான்மை பிரிவு அமைப்பாளர் செல்லத்துரை, ஒன்றிய இலக்கிய அணி சத்யா சுந்தர், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ரத்தினம், ஒன்றிய கவுன்சிலர்கள் ரியாஸ்தீன், தங்கசாமி, நாகஜோதி, மாவட்ட பிரதிநிதி சேதுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.