தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்


தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
x

பேரையூரில், டி.கல்லுப்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

மதுரை

பேரையூர்

பேரையூரில், டி.கல்லுப்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தனசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி கிராமம் தோறும் உறுப்பினர் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒன்றியத்தில் அதிக வாக்குகள் பெற்று தருகிறார்களோ அவர்களுக்கு 10 பவுன் சங்கிலி வழங்கப்படும் என்று பேசினார். கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் சாயல்குடி ராமர் கலந்துகொண்டு தலைமை கழகம் அறிவித்த ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வருசைமுகமது வரவேற்றார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாண்டிமுருகன் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி சாதிக், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், வெற்றிவேல், இளைஞர் அணி நிர்வாகிகள் முருகானந்தம், தினகரன், சாரதி, சிவமாரிமுத்து, மாசாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story