தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம்
சங்கராபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம்
மூங்கில்துறைப்பட்டு
சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மணலூரில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கவுன்சிலர் செல்வி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாணவர் அணி அமைப்பாளர் விஜயானந்த் முன்னிலை வகித்தார். இதில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது, இளைஞர்களை அதிகளவில் சேர்ப்பது, கட்சி பதவிகள் வழங்குவது ஆகியவை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களின் குறைகள் குறித்தும் அதை உடனடியாக தீர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் முத்தமிழன், ஜோசப், ரபீக்கான், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் காமராஜ் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.