தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகருக்கு உட்பட்ட 1-வது பகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி கவுன்சிலர் சேதுராமன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல், மண்டல தலைவர் குருசாமி, பகுதி செயலாளர் மாரீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர பொருளாளர் சீனிவாசபெருமாள், கவுன்சிலர் சசிக்குமார் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை பேச்சாளர் மதுரை அலெக்சாண்டர், சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் மாநகர துணை செயலாளர் ரவிச்செல்வம், மாவட்ட பிரதிநிதி கருப்பசாமி, 7-வது வட்ட செயலாளர் ராஜேஷ், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 1-வது வட்ட செயலாளர் சென்றாயபெருமாள் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை 1-வது பகுதி செயலாளர் அ.செல்வம் செய்திருந்தார்.


Next Story