அண்ணா சிலைக்கு தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


அண்ணா சிலைக்கு தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x

அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவாரூர்

அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் திருவாரூரில் நகர தி.மு.க. சா்பில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு நகர செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. அண்ணா சதுக்கத்தில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மேலும் நகர கட்சி அலுவலகம், திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் அண்ணா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், முன்னாள் நகர துணை செயலாளர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, தி.க. மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.

வலங்கைமான் கடைத்தெருவில் ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கும்பகோணம் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

வலங்கைமான் ஒன்றிய நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடைத்தெரு பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றியக்குழு தலைவர் கே.சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் நகர செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணைத் தலைவர் பிரபாகரன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் இளங்கோவன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தி.மு.க. சட்டத்திட்ட திருத்தக் குழு உறுப்பினர் பி.ராசமாணிக்கம் தலைமை தாங்கினார்.ஒன்றியக்குழு தலைவர்சோம.செந்தமிழ்ச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நீடாமங்கலத்தில் அ.தி. மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் நகர செயலாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் மணலூர் ராஜேந்திரன், ஆதிஜனகர், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் மாவட்ட, ஒன்றிய நகர, கிளை நிர்வாகிகள், சார்பு அணியினர் கலந்து கொண்டு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் தி.மு.க. சார்பில் டிஆர்பி.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன், மன்னார்குடி நகர செயலாளர் வீராகணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வம், தமிழ் கண்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், முன்னாள் நகர சபை தலைவர் சுதா அன்புசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. .இதில் மாநில வக்கீல் பிரிவு செயலாளர் கு.சீனிவாசன், நகர செயலாளர் ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மாவட்ட செயலாளர் சிவ.நாராயணசாமி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதில் நிர்வாகிகள் சிவ.பக்கிரிசாமி, தம்பிராஜா, ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story