நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. உண்ணாவிரதம்


நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. உண்ணாவிரதம்
x

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரதத்தில்எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

விருதுநகர்


நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரதத்தில்எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

நீட் தேர்வு

தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து தி.மு.க. இளைஞரணி மருத்துவ அணி மற்றும் மாணவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைமை அறிவித்தது.

அதன்படி நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு விருதுநகர் தேசபந்துதிடலில் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் குமார், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் திலகவதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கபாண்டியன், நகர சபை தலைவர் மாதவன், நகர செயலாளர் தனபாலன், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story