தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்-அ.தி.மு.க. மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு


தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்-அ.தி.மு.க. மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அ.தி.மு.க. மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி கூறினார்.

ராமநாதபுரம்

பரமக்குடி

தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அ.தி.மு.க. மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பரமக்குடி காந்தி சிலை முன்பு பரமக்குடி நகர் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகர், நகர் அவைத்தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் ஜமால் வரவேற்றார். இதில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கீர்த்திகா முனியசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக வரி உயர்த்தப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனே வரி உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தி.மு.க ஆட்சியில் வழங்கிய பொங்கல் தொகுப்பு எவ்வளவு தரமற்றது என்பது மக்களுக்கு தெரியும். ஆகவே பொதுமக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் மாரி, வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, முன்னாள் நகர் செயலாளர் வரதன், பரமக்குடி நகர் கூட்டுறவு வங்கி தலைவர் வடிவேல் முருகன், ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜன், கவுன்சிலர் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி கனகராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமநாதன், நகர் பேரவை துணைச் செயலாளர் கார்த்தி, நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான் நன்றி கூறினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில், நகர் செயலாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் முனியசாமி பேசியதாவது:- சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வால் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். தேர்தலின்போது தி.மு.க. அளித்த பல வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பாதாள சாக்கடை தொட்டிகள் அனைத்தும் உடைந்து தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறு பேசினார்.


Next Story