தி.மு.க. கொடியை அவமதித்ததாக பா.ஜனதாவினர் 3 பேர் மீது வழக்கு
தி.மு.க. கொடியை அவமதித்ததாக பா.ஜனதாவினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் பா.ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தி.மு.க.வில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்தார். இந்த நிலையில் உண்ணாவிரதத்தின் போது தி.மு.க. கட்சி கொடியையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும் அவமதித்ததாக பா.ஜனதாவினர் மீது தி.மு.க. நிா்வாகிகள் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதேபோல் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் அறந்தாங்கி தி.மு.க. நிர்வாகிகள் குமார் மற்றும் துரைக்கண்ணு ஆகியோர் அளித்த புகாரின் பேரில் பா.ஜனதாவில் சேர்ந்த மாரிமுத்து, பா.ஜனதா மாவட்ட செயலாளர் முரளிதரன், இளைஞர் மேம்பாட்டு பிரிவு தலைவர் பாண்டியராஜன் ஆகிய 3 பேர் மீது கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.