தி.மு.க. பெண் கவுன்சிலர் உள்பட 6 பேர் மீது வழக்கு
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தி.மு.க. பெண் கவுன்சிலர் உள்பட 6 பேர் மீது வழக்கு
விழுப்புரம்
விழுப்புரம்
மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி(வயது 37), தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவருடைய கணவர் நாகராஜ் மீது கோட்டக்குப்பம் போலீசார், கொலை வழக்கு பதிவு செய்ததை கண்டித்து நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துர்காதேவி குடும்பத்தினர், மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். உடனே அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் துர்காதேவி, அவரது கணவர் நாகராஜ், மகன் விமல்ராஜ், ஆறுமுகம் மனைவி தேவகி, ராஜி மனைவி ரேகா, விநாயகம் மனைவி சித்ரா ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story