தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நாகப்பட்டினம்
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் அறிவுறுத்தலின்படி நாகை புதிய பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியன் முன்னிலை வகித்தார். பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் லோகநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, திலகர், அபூபக்கர், நகரத் துணைச் செயலாளர் சிவா உள்பட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story