தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னரை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

கூடலூர்,

சட்டசபை மரபை மீறிய கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடலூரில் காந்தி சிலை முன்பு நேற்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வாசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக சட்டசபையில் மரபை மீறிய கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சபி (காங்கிரஸ்), சகாதேவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), முகமது கனி (இந்திய கம்யூனிஸ்டு), அனிபா (முஸ்லிம் லீக் ), ஜனநாயக மனிதநேய மக்கள் கட்சி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். முன்னதாக கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story