இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி ராணிப்பேட்டை முத்துக்கடையில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சாரதி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும், இளைஞர் அணி, மாணவரணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகளும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும், தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பூங்காவனம் நன்றி கூறினார்.


Next Story